'போதையற்ற வீட்டையும் நாட்டையும் உருவாக்க வாறீர்: மட்டு இந்துக்கல்லூரி மாணக்கருக்கு: மட்டு மதுவரி திணைக்களம் விழிப்புணர்வு.....

 'போதையற்ற வீட்டையும் நாட்டையும் உருவாக்க வாறீர்: மட்டு இந்துக்கல்லூரி மாணக்கருக்கு: மட்டு மதுவரி திணைக்களம் விழிப்புணர்வு.....

நாட்டில் போதையற்ற வீட்டையும் நாட்டையும் உருவாக்க வாறீர்  எனும் தலைப்பின் கீழ் போதையற்ற நாடே சௌபாக்கியமான தேசம் எனும் கருப்பொருளை மையப்படுத்தி இலங்கை மதுவரித்திணைக்களம்  பல மட்டங்களில் இச்செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் மதுவரித்திணைக்களம் இச்செயற்பாட்டை முன்னிருத்தி வருகின்றது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஒரு செயலமர்வு (15) அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் ச.தங்கராஜா. மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் நியுட்டன் அவுஸ்கோன், மட்டக்களப்பு மதுவரி பொறுப்பதிகாரி  P.செல்வக்குமார் ஆகியோருடன் விசேட வளவாளராக வைத்தியர் சௌந்தரராஜன் டான் அவர்களும் கலந்து தம் எண்ணங்களை பகிந்து விரிவுரை வழங்கி இருந்தார்.

இந்நிகழ்வானது மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க செயலாளர் இரா.சிவநாதன் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.







Comments