மட்டக்களப்பில் களுதாவளை மற்றும் மாவடிவேம்பு ஆரம்ப பிரிவு வைத்தியசாலைக்கு விருது.....
இதற்கான விருது வழங்கும் நிகழ்வு (10) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனையில் இடம் பெற்றது.
உலக வங்கியின் அனுசரணையில் பி.எஸ்.எஸ்.பி திட்டத்தின் கீழ் ஆரம்பப் பிரிவு மற்றும் பிரதேச வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துகின்ற செயல்திட்டத்தில் அமைவாக, சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட ஆரம்பப்பிரிவு மற்றும் பிரதேச வைத்தியசாலைகள் விருது வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகுணன் தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் செயலாளர் ஜி.ஜி.முரளிதரன் கலந்துகொண்டார்.
சுகாதார அமைச்சின் ஆரம்ப பிரிவு திட்ட பணிப்பாளர் வைத்தியர ஜயசுந்தர பண்டார உட்பட மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.
2023 க்கான விருது வழங்கும் நிகழ்வில் களுதவளை ஆரம்பப் பிரிவு வைத்தியசாலை முதல் இடத்தினையும், மாவடிவேம்பு பிரதேச வைத்திசாலை முதல் இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment