ஹெல்ப் எவர் அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்..............

ஹெல்ப் எவர் அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்..............

மட்டக்களப்பு ஹெல்ப் எவர் அமைப்பின் 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரத்தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில், இவ் இரத்தான முகாம் இடம்பெற்றது.
இரத்த தான நிகழ்வில் அதிதிகளாக சௌமினி ரவிச்சந்திரன், இயற்கையின் மொழிகள் அமைப்பின் தலைவி காயத்திரி உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவு வைத்தியர் ரந்திம, பொதுசுகாதார பரிசோதகர் பி.எம்.எம்.பைசல், வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், ஹெல்ப் எவர் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் இரத்ததான முகாமில் பங்கேற்றனர். இரத்தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.






Comments