' எனக்கு வயது 75' அலேக்சாண்டரின் நூல் வெளியீடு......
தற்காலத்திற்திற்கு ஏற்றால் போல் ஒரு நூல் 'எனக்கு வயது 75' இன் நூலை மட்டக்களப்பில் சேவையாற்றி தற்போது ஓய்வு நிலைக்கு சென்ற அதிபரான லூக்காஸ் அலேக்சாண்டரினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது (16) அன்று மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மண்டபத்தில் பெண் நோயியல் மகப்பேற்று நிபுனர் பேராசிரியர் K.E.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இவ்புத்தக வெளியீட்டில் சிரேஸ்ட விரிவுரையாளரான அருட்தந்தை நவரெத்தினம் (நவாஜி), கிழக்கு பல்கலை கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கௌரி லட்சுமிகாந்தன், ஓய்வு நிலை உதவி கல்விப்பணிப்பாளர்கள், ஓய்வு நிலை உதவி கல்விப்பணிப்பாளர்கள், ஓய்வு நிலை அதிபர்கள், ஜோசப் கல்லூரியின் பழைய மாணவ மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.
லூக்காஸ் அலேக்சாண்டர் அவர்களினால் 2008ம் ஆண்டு 'அவுரி' எனும் நூல் வெளியிடப்பட்டதாக நினைவு கூறப்பட்டதுடன், கிழக்கு பல்கலை கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்கு சேகரிக்கப்படும் பொருட்களில் ஒன்றாக இணைத்துக் கொள்வதற்காக நூலாசிரியரான லூக்காஸ் அலேக்சாண்டர் அவர்களின் பெற்றோரின் 1938ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட திருமணபதிவு ஆவணங்கள் கிழக்கு பல்கலை கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கௌரி லட்சுமிகாந்தன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
Comments
Post a Comment