நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை...................

 நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை...................

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 பெண் கைதிகளும் 989 ஆண் கைதிகளும் அடங்குகின்றனர்.
அதற்கமைய, மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 ஆண் கைதிகளும், இரண்டு பெண் கைதி அடங்கலாக 46 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, சர்வமத ஒன்றிய பிரதிநிதிகள், பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்த சில்வா உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
சிறு குற்றம் புரிந்த மற்றும் தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் சகல சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி (25)ம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments