மட்டக்களப்பு நகரில் 45 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு.....
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் நளின் ஆரியரத்தின தலைமையிலான தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (5) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் அத்தியாச்சகர் பணிமனை,, சமுர்த்தி வங்கி, மட்டக்களப்பு மாநகர சபை, மட்டக்களப்பு மங்கள ராம விகாரை உட்பட அரச மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பணியாக அதிகாரிகள், மற்றும் பொதுச் சுகாதார பரிசோதரர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் டெங்கு சுற்றி வளைப்பு தேடுதலின் போது 45 இடங்களில் டெங்கு குடம்பிகள். பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியக பூச்சிகளாளர் தர்ஷினி கணநாதன் தெரிவித்தார்.
மாவட்ட சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் எஸ்.திசவீரசிங்கம் தலைமையிலான பொது சுகாதார பரிசோதரர்கள் குறித்த டெங்கு பரிசோதனை வேலை திட்டத்தில் இணைந்திருந்தனர்.
மேற்குறித்த இடங்களில் நடத்தப்பட்ட தேர்தல்களின் போது டெங்கு பரவும் இடங்களாக வைத்திருந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டன. டெங்கு குடம்பிகள் உற்பத்தியாகியிருந்த 45 இடங்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டதாக மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எஸ்.தசவீரசிங்கம் தெரிவித்தார். டெங்கு பரவும் இடங்களாக சூழலை வைத்திருந்த அரச மற்றும் அரசு சார்பற்ற நிறுவன பொறுப்பாளர்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
Comments
Post a Comment