காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் 21வது ஆண்டு நிறைவு நிகழ்வு ...............
காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் 21வது ஆண்டு நிறைவு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கடந்த 21 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் 21 ஆண்டு நிறைவு நிகழ்வும், சுய உற்பத்தி பொருளின் அறிமுக நிகழ்வும் (29) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக, மாவட்ட அரசாங்க அதிபர் ஜி.ஜி.முரளிதரன் கலந்து கொண்டார்.
அவுஸ்திரேலியா அம்பாள் நிறுவனத்தின் நிதி உதவியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள், கணவனை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்களின் வாழ்வாதாரத்திற்கான சுயதொழில் கடன் உதவி என்பன வழங்கப்பட்டன.
கிரீன் பெட்டி எனும் இளைஞர் யுவதிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அறிமுக நிகழ்வு இடம்பெற்றதுடன், இதன் போது மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி கௌரமளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் தஜிவரன், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியர் அருளானந்தம், காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் ஆலோசகரும் கட்டட நிருமான துறையின் தலைவருமான வீ.ரஞ்சிதமூர்த்தி, காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் பணியாளர்கள், பயனாளிகள், மாணவர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment