கல்முனை மறைக்கோட்ட மறை ஆசிரியர்களுக்கான ஒளி விழா/2023.........

 கல்முனை மறைக்கோட்ட மறை ஆசிரியர்களுக்கான ஒளி விழா/2023.........

(டினேஸ்)

கல்முனை மறைக்கோட்ட மறை ஆசிரியர்களுக்கான ஒளி விழா நிகழ்வானது (09) அன்று கல்முனை திரு இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக அருட்தந்தை ஜெனிஸ்டன் வின்சன், மட்டக்களப்பு மறை மாவட்ட மறைக்கல்வி நடு நிலை இயக்குனர் அருட்தந்தை ஜிரோன் டிலிமா, கல்முனை மறைக்கோட்ட குரு முதல்வர் அருட்தந்தை A.தேவதாசன் மற்றும் கல்முனை மறைக்கோட்ட குருக்கள், கல்முனை மறைக்கோட்ட மறைக்கல்வி நிலைய உதவி இயக்குனர் அருட்சகோதரி யே.செல்வராணி, மட்டக்களப்பு மறைக்கல்வி நடு நிலை உதவி இயக்குனர் அருட்சகோதரி சலோமி மொறாயஸ் மற்றும் பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், மறையாசிரியர்கள், அம்பாறை மீசமே தஹம்பாசல் குருவருன்கே சிங்கள மறையாசிரியர்கள் இணைந்து கொண்டதுடன் மறையாசிரியர்களின் நிகழ்வுகள் நடைபெற்றது.
இதன் போது மறையாசிரியர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்று இறுதியில் மட்டக்களப்பு மறைமாவட்ட மறைக்கல்வி நடு நிலை இயக்குனரை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்று, இதன் பின் வருகை தந்த கிறிஸ்மஸ் தாத்தா மகிழ்ச்சியாக நிகழ்வை நிறைவு செய்தார்.













Comments