"வசந்தன் கூத்து ஆற்றுகை 2023"

 "வசந்தன் கூத்து ஆற்றுகை 2023"

தமிழர் பாரம்பரிய கலைவடிவங்களுள் ஒன்றாகவும் தெய்வீகமும் மகிழ்விப்பும் இணைந்த கலை வடிவங்களுள் ஒன்றாகவும் இன்றளவில் தமிழர் பாரம்பரியத்திலிருந்து தனித்துவத்தை இழந்து மருவிச்செல்லும் கலைவடிவமாக காணப்படுகின்ற வசந்தன் கூத்துக்கலைக்கு தனித்துருவத்துடன் கூடிய மீட்டுருவாக்கம் செய்துள்ள கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் அவர்களின் இவ் முயற்சிக்கு சிரம்தாழ்த்தி வணங்கி கட்டுரைக்குள் முன்னகர்ந்து செல்கிறேன்.
இன்றளவில் மருவிச் செல்லும் கலைவடிவங்கள் பலவற்றை புதியன புனைந்து மீட்டுருவாக்கம் கொடுக்கும் செயற்பாடுகள் பலவற்றை மேற்கொண்டுவரும் சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸ் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த வசந்தன் கூத்து ஆற்றுகையை பற்றி அறிந்திருந்த போதிலும் அதில் கலந்துகொள்ள முடியாமை கவலையளிக்கிறது தமிழர் பாரம்பரிய கலைவடிவங்களுக்கு குறிப்பாக மட்டக்களப்பு தனித்துவ கலைவடிவங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் அவரின் செயற்பாடுகளுக்கு மட்டக்களப்பை சேர்ந்த கலைகளை நேசிக்கின்றவர்கள் என்ற வகையில் ஆதரவை தெரிவிக்கிறோம்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2ம் வருட நாடகத்துறை மாணவர்களை தேர்ந்தெடுத்து வசந்தன் கூத்துக்கலையினை சில கிழமைகளாக இரவு பகலாக பயிற்றுவித்து இவ் அரங்கேற்றத்தினை இன்றைய தினம் வெகு சிறப்பாக அவர் நிகழ்த்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் அரங்கேற்ற நிகழ்வில் பிள்ளையார் வசந்தன் குறத்தி வசந்தன், சிங்கி வசந்தன்,
முசுட்டு வசந்தன், சூட்டு வசந்தன், அனுமார் வசந்தன் போன்ற வசந்தன் ஆற்றுகை வடிவங்கள் சிறந்த முறையில் ஆற்றுகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஆற்றுகை நிகழ்வினை அற்பணிப்புடன் பயிற்றுவித்து நெறிப்படுத்திய விரிவுரையாளருக்கும் கலந்துகொண்டு தங்களது அதித திறமையினை வெளிப்படுத்தி மருவி வரும் கலைவடிவத்தை எமது அடுத்த சந்ததிக்கு கொண்டு சென்ற பல்கலைக்கழக 2ம் வருட நாடகத்துறை மாணவவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது படைப்பாற்றுகைகள் தொடரட்டும்.


Comments