19 ஆவது தேசிய பாதுகாப்பு தினம்.....

 19 ஆவது தேசிய பாதுகாப்பு தினம்.....

19 ஆவது தேசிய பாதுகாப்பு தினமான மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களது தலைமையில் பாதுகாப்பு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன் போது முதலில் பிரதேச செயலாளரால் நாட்டின் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு தாய் நாட்டிற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து மௌன இறை வணக்கம் செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் தேசிய பாதுகாப்பு தினம் தொடர்பாகவும் அனர்த்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான உரையும் பிரதேச செயலாளரால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்தி தலைமை அதிகாரிகள், சமூக சேவை உத்தியோகத்தர், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திட்டமிடல் மற்றும் சமுர்த்தி அலுவலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.

Comments