காத்தான்குடியில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்........
மட்டக்களப்பு காத்தான்குடியில், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாமொன்று நடாத்தப்பட்டது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கும் பொருட்டு, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் காத்தான்குடி கிளை அலுவலகம் இரத்தான முகாமை ஒழுங்குபடுத்தியிருந்தது.
செஞ்சிலுவை சங்கத்தின் காத்தான்குடி கிளையின் உறுப்பினர் முஹமட் சலீம் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர் மற்றும் தாதியர்கள் இரத்த மாதிரிகளைச் சேகரித்தனர்.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் காத்தான்குடி கிளை 9 ஆவது முறையாக, இரத்ததான முகாமை நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment