சுரக்கும் பவ நிகழ்ச்சித்திட்டம் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பம்............

 சுரக்கும் பவ நிகழ்ச்சித்திட்டம் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பம்............

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் கல்வி அமைச்சு இணைந்து செயற்படுத்தும் நிகழ்ச்சி திட்டங்களுள் ஒன்றான சுரக்கும் பவ திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் பாதுகாப்பு குழுக்களை உருவாக்கி அதன் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் இடம்பெறுகிறது.
தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி, நூறாணியா வித்தியாலயம், மெத்தைப் பள்ளி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுக்களை அமைத்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் காகிதாதிகள் மற்றும் உபகரணங்கள் காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களால் பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்விற்கு நிஸா றியாஸ் (DCPO), பீ.கௌரீசன் (CA) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments