களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் கருவளமையத்திற்கு ரியூப் வார்மர் கருவி வழங்கப்பட்டள்ளது......
மட்டக்களப்பு எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு ரியூப் வார்மர் கருவி வழங்கப்பட்டள்ளது.
சமூகசேவகரும் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவருமான அ.வசிகரனின் நிதிப் பங்களிப்புடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கருவளமையத்திற்கான பரிசோதனை கருவியினை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
திருமணமாகியும் குழந்தை பாக்கியத்தை பெறாத இன்னுமொரு குழந்தை பாக்கியத்தை எதிர்பார்க்கின்ற தம்பத்திகளுக்கான இலவச கருத்தரித்தல் மையம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் தலைமையில் வைத்தியாசலையின் மகப்பேற்று நிபுணர் மு.வசந்தராசாவின் செயற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பபட்டது.
எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் ரியூப் வார்மர் கருவியை வைத்திய அத்தியட்சகரிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் விந்தனுவை சேகரிப்பதற்கானவு இயந்திர சாதனமும் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment