மண்முனை வடக்கில் செயற்பாட்டு ஒப்பந்தத்தில் மரநடுகை திட்டம்...........
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் செயற்பாட்டு ஒப்பந்தத்தில் மரநடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செயற்பாட்டு ஒப்பந்த மரநடுகை திட்டத்திற்கேற்ப மண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள், கிராமோதய சிகிச்சை நிலையங்களுக்கு இயற்கையின் மொழி அமைப்பினருடன் டாக்டர் காந்தா நிரஞ்சன் அவர்களின் நிதி அனுசரணையில் பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை மொழி அமைப்பினருடன் கிராமோதய சிகிச்சை நிலைய உத்தியோகத்தர்களும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டதுடன் 75 பழமரக்கன்றுகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
இது 4ம் காலாண்டு மரநடுகை திட்டத்திற்கேற்ப மட்டக்களப்பு மாவட்ட செயலாளருடன் பிரதேச செயலாளர் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கமைய சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தரினால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment