கோறளைப்பற்று மத்தியில் இலக்கிய விழாவினை நடத்துதல் தொடர்பான கலந்துரையாடல்..........
கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் இவ்வாண்டுக்கான கலை இலக்கிய விழாவினை நடத்துதல் தொடர்பான கலந்துரையாடல் (20) திகதி இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள கலை மன்றங்களின் உறுப்பினர்கள், பிரதேச கலாசாரப் பேரவை மற்றும் அதிகார சபை உறுப்பினர்கள், துறை சார் கலைஞர்கள் உட்பட கலாசார உத்தியோகத்தர்கள், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment