அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான முன்னாயத்தப் பயிற்சி......

 அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான முன்னாயத்தப் பயிற்சி......

அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான முன்னாயத்தப் பயிற்சியானது பாதுகாப்பு அமைச்சின், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் எற்பாட்டில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் பிரதி பணிப்பாளர் டபில்யு எஸ் யூ பிரவாத் தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (22) இடம் பெற்றது.
எதிர் வரும் காலங்களில் பருவ பெயர்ச்சி ஆரம்பமாகவுள்ளதால் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான முன்னாயத்த தற்செயல் திட்டத்தினை புதுப்பித்தல் மற்றும் செயல்படுத்தல் தொடர்பான பயிற்சிநெறி மாவட்ட அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் ஆர். சிவநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இப்பயிற்சி நெறியின் வளவளராக எம் ஏ டி என் முத்து கொட மற்றும் வி.பாலரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments