ஹிஸ்புல்லாஹ்வின் மட்டக்களப்பு கம்பஸ், மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாஹ்வின் மட்டக்களப்பு கம்பஸ், மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.......

ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னர், அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட, மட்டக்களப்பு புனானையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்க்குச் சொந்தமான மட்டக்களப்பு கம்பஸ் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கம்பஸ் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கொண்டு வந்திருந்த நிலையில், அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் அண்மையில் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிற்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையின் பிரகாரம்,  சம்பிரதாய பூர்வமாக மட்டக்களப்பு கம்பஸ் மீண்டும் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.


Comments