கன்னங்குடா மகா வித்தியாலய மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்..........

 கன்னங்குடா மகா வித்தியாலய மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்..........

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கன்னங்குடா மகா வித்தியாலய மாணவர்கள் (08) காலை பாடசாலை செல்லும் வழியில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான எட்டு மாணவர்கள் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் வழியில், குறிஞ்சாமுனை எனும் இடத்தில் வீதி ஓரமாக நின்ற பனை மரத்தில் இருந்த குளவிகள் கலைந்தே மாணவர்கள் குளவிக் கொட்டுக்குள்ளாகினர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, தாண்டியடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments