மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி.....

மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி.....

சீரற்ற காலநிலை காரணமாக குண்டசாலை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி மஹியங்கனை வீதியில் பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குண்டசாலை பகுதியில் நேற்று (02) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பழக்கடையின் உரிமையாளரும் அவருக்கு உதவியாக இருந்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதுடன், கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் வராபிட்டிய குண்டசாலை பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடையவர்.

மரம் விழுந்ததில் கண்டி மஹியங்கனை வீதியில் பயணித்த வேன் ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன் வேனில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

 

Comments