சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத சேமக்காலையில் ஆத்துமாக்கள் நினைவு கூறல்....

 சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத சேமக்காலையில் ஆத்துமாக்கள் நினைவு கூறல்....

(டினேஸ்)

நவம்பர் 2ந் திகதி  மரித்த ஆத்துமாக்களை நினைவு கூர்ந்து சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத சேமக்காலையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டதுடன், இம்மாதம் முழுதும் விஷேடமாக இவர்களுக்காக செபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்திருப்பலியினை அருட் தந்தை  A.சுரேந்திரகுமார் அவர்களுடன் இணைந்து பங்குத்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளார்  ஒப்புக்கொடுத்தார்,  திருப்பலி மிகவும் அமைதியாகவும் ஆசிர்வாதமாகவும் இறந்த ஆத்துமாக்களை நினைவு கூர்ந்து  நிறைவேற்றப்பட்டது. இத்திருப்பலியினை  மறை ஆசிரியர்கள் சிறப்பித்திருந்தனர்.

திருப்பலி நிறைவில் அனைத்து கல்லறைகளும் அருட்தந்தையர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது, மேலும் உறவினர்களால் கல்லறைகளுக்கு மலர்கள் வைக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு இறந்த ஆத்துமாக்களுக்காக நினைவு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.







Comments