வடிவேல் றமேஸ் ஆனந்தன் வாழைச்சேனை திடீர் மரண விசாரணை அலுவலராக நியமனம்..........
கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அலுவலராக வாழைச்சேனை, கறுவாக்கேணியை வசிப்பிடமாகக்கொண்ட வடிவேல் றமேஸ் ஆனந்தன் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனம் பெற்ற வடிவேல் றமேஸ் ஆனந்தன் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் திடீர் மரண விசாரணை அலுவலராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
வடிவேல் றமேஸ் ஆனந்தன் கடந்த 2011ம் ஆண்டு முதல் கோறளைப்பற்று, வாழைச்சேனைப் பிரதேச செயலகப்பிரிவில் திடீர் மரண விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்ததுடன், கால்குடா, வாழைச்சேனை வாகரை பொலிஸ் பிரிவுகளிலும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உளநல டிப்ளோ மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மரண விசாரணை டிப்ளோமா ஆகியவற்றைப்பூர்த்தி செய்துள்ளதுடன், சந்திவெளி விவேகானந்தா அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியராகவும் கிராமிய அபிவிருதித் திட்டமிடல் அமைப்பின் (RDPO) பணிப்பாளராகவும் மாணிக்கவாசகர் சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் முகாமையாளராகவும் தொண்டாற்றி வருவதுடன், சமய, சமூகச்செயற்பாடுகளில் முன்னின்று செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment