மட்டு மாவட்டத்தில் சமுர்த்தி சந்தைப்படுத்தல் பற்றிய ஆய்வு செயலமர்வு....

மட்டு மாவட்டத்தில் சமுர்த்தி சந்தைப்படுத்தல் பற்றிய  ஆய்வு செயலமர்வு.... 
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சமுர்த்தி சந்தைப்படுத்தல் பற்றிய ஆய்வு தொடர்பான ஒரு நாள் செயலமர்வு டேபா மண்டபத்தில் (07) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளரும், சமுர்த்தி  பிரிவின் கணக்காளருமான MS.பஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஸ்ட முகாமையாளர் கமல்லியனகே கலந்து கொண்டதுடன், இவ் ஒருநாள் செயலமர்வின் விரிவுரையாளராக கைத்தொழில் சேவைகள் பணியக (ISB) சிரேஸ்ட ஆலோசகர் ஹேவாரெட்ன அவர்கள் விரிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இக்கருத்தரங்கில் கடந்த காலங்களில் நிலாவெளி சமுர்த்தி பயிற்சி நிலையத்தில் கலந்து கொண்ட  சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்கள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாவட்ட மட்ட செயலமர்வில் கலந்து கொண்டனர். 
இச்செயலமர்வு; இன்று (07) மட்டக்களப்பு மாவட்டத்திலும் நாளை (08) திருகோணமலை மாட்டத்திலும் நடைபெறவுள்ளதுடன், பல மாவட்டங்களில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் JF.மனோகிதராஜ் அவர்களும் மாவட்ட செயலக சமுர்த்தி கருத்திட்ட சிரேஸ்ட முகாமையாளர் AM.அலி அக்பர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.







Comments