மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பிற்கும், பொதுநலவாய அமைப்பின் மேம்பாட்டு அலுவலக வெளிநாட்டு பிரிவுக்கும் கலந்துரையாடல்.......
மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பிற்கும், பொதுநலவாய அமைப்பின் மேம்பாட்டு அலுவலக வெளிநாட்டு பிரிவுக்கும் கலந்துரையாடல்.......
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பிற்கும், லண்டனில் இருந்து பொதுநலவாய அமைப்பின் மேம்பாட்டு அலுவலக வெளிநாட்டு பிரிவுக்கும் இடையிலான நிகழ்நிலை ஊடான கலந்துரையாடல் நிகழ்வு (06) கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
பொதுநலவாய மேம்பாட்டு அலுவலக வெளிநாட்டு பிரிவுக்கான செயலாளர் பாரிஸ் மன்சூர் அவர்கள் நிகழ்நிலை ஊடாக கலந்து கொண்டு கருத்துக்களைக் கேட்டறிந்தார். அவ்வகையில் நிகழ்வின் ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் சி.மாமாங்கராஜா அவர்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்துவைத்ததோடு குறித்த கலந்துரையாடலின் நோக்கம், தேவைப்பாடுகள் பற்றிய விளக்கத்தை முன்வைத்தார். அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்கால நிலமை தொடர்பான ஜதார்த்த நிலை விளக்கப்பட்டது. அவ்வகையில் மாவட்டத்தின் காணி தொடர்பான விவகாரம் மற்றும் கல்வி, சுகாதாரம், மாவட்டத்தின் சுற்றுச்சூழல், சுற்றுலா, விவசாயம், கைத்தொழில் உற்பத்தி தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு மாவட்டத்தில் தற்காலத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் அதனை குறைப்பதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டன. மேலும் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் சார்ந்த கருத்துக்கள் செயற்குழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. அமைப்பின் செயலாளர் எந்திரி த.அன்ரன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.
Comments
Post a Comment