ஆரைப்பற்றை சுப்ரமணியம் வித்தியாலய மாணவர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை...........

 ஆரைப்பற்றை சுப்ரமணியம் வித்தியாலய மாணவர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை...........

மட்டக்களப்பு மண்முனைப்பற்று கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆரைப்பற்றை சுப்ரமணியம் வித்தியாலயத்திலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 10 மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்டனர். இவர்களில் 5 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 50 வீத சித்திகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் பாடசாலையாகவும் ஆரைப்பற்றை சுப்ரமணியம் வித்தியாலயமே திகழ்கிறது.

பாடசாலையின் அதிபர் யுகமலர் தயாலகுணம், பாடசாலையின் முன்னாள் அதிபர் விஜேந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், ஆசிரியை நிந்துஷா கிருபாகரன் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கியிருந்தார்.

சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (23) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சாதனை மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

Comments