பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையில், துரித கதியில் அபிவிருத்திப் பணிகள்.............

 பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையில், துரித கதியில் அபிவிருத்திப் பணிகள்.............

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்களை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் நேரில் பார்வையிட்டார்.

பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்தியர் இனியனால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனின் சிபாரிசுடன், உலக வங்கியின் நிதியுதவிடன் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

18 வருடங்களுக்குப் பின்னர் இடம்பெறும் புதிய அபிவிருத்திப் பணிகளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டதுடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.

Comments