மட்டக்களப்பு காணி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய நேர்முகப்பரீட்சை...........

 மட்டக்களப்பு காணி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய நேர்முகப்பரீட்சை...........

மட்டக்களப்பு மாவட்ட காணி மத்தியஸ்தர் சபை மத்தியஸ்தர் தெரிவிக்கான நேர்முகப் பரீட்சை மண் முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று (01) இடம் பெற்றது.

மாவட்டச் செயலக மத்தியஸ்த இணைப்பாளர், பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், மாவட்ட மத்தியஸ்த பயிற்றுனர் எம்.ஐ.எம்.ஆசாத்தின் நெறிப்படுத்தலில் நேர்முகப்பரீட்சைகள் இடம்பெற்றன.

நேர்முக பரீட்சைக்கு சமூகம் கொடுத்தவர்களிலிருந்து தெரிவு செய்யப்படுவோருக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு, பரீட்சை நடாத்தப்படவுள்ளது.

Comments