காத்தான்குடி மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா...............
மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா, கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (23) சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரின் அதிபர் எம்.ஏ.நிஹால் அஹமட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
2019ம் ஆண்டு தொடக்கம் 2023ம் ஆண்டு வரை பாடசாலையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்த மாணவர்கள், சிறந்த பெறு பேறுகளைப் பெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
விசேட விருந்தினர்களாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் மற்றும் பேராசிரியர் முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment