சமுர்த்தி வங்கியின் மூன்றாம் காலாண்டிற்கான முன்னேற்ற மீளாய்வுக கூட்டம்..........
கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கியின் 2023 ஆம் ஆண்டின் 3ம் காலாண்டிற்கான முன்னேற்ற மீளாய்வுக கூட்டம் (22) ஆம் திகதி பிரதேச செயலாளர் எஸ்.எச். முசம்மில் தலைமையில் நடைபென்றது.
இதன் போது கடந்த ஒன்பது மாத காலத்திற்கான வங்கியின் நடவடிக்கைகள் தொடர்பாக முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன் அவர்களால் அளிக்கை ஊடாக தெளிவுபடுத்தியதுடன், அஸ்வஸ்ம திட்டத்தின் பின்னரான காலத்தில் சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் என்ற தலைப்பில் தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர் அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.
இதன் போது வங்கி சங்க முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத், கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப், கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விதாதா உத்தியோகத்தர்கள் பொருளாதார ஆலோசனை பிரிவு உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பிரதேச செயலாளரினால் வங்கியின் எதிர்காலம், பிரதேச மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தமாக சமுர்த்தி வங்கியின் செயல்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என ஆலோசனை வழங்கியிருந்தார்.
Comments
Post a Comment