இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சித்தியடைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கினார்......

 இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சித்தியடைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கினார்......

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமை பரீட்சையில் சித்தியடைந்த சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்குடா கல்வி வலயத்திலுள்ள பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த பாடசாலையில் 12 மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். பாடசாலை அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அதிதியாக கலந்து கொண்ட கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராட்டுகளை தெரிவித்துடன் சித்தியடைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கினார். அத்துடன் சிறுவர் சேமிப்பு கணக்கு புத்தகமும் வழங்கப்பட்டது. நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Comments