கெல்விடாஸ் நிறுவனம் லிப்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து............
வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதில் இளைஞர் தலைமையிலான முன் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில் கெல்விடாஸ் நிறுவனத்துக்கும் லிப்ட் தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமானது (29) தாஜ் சமுத்திரா உல்லாச விடுதியில் கைச்சாத்திடப்பட்டது.
ஜீசேர்ப் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் கெல்விடாஸ் நிறுவனத்தினால் தன்னர்வ தொண்டு நிறுவனங்களின் துணையுடன் இளைஞர்கள் மத்தியில் வன்முறை தீவிரவாதத்தை தடுக்கும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக லிப்ட் நிறுவனத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மற்றும் தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் குழுக்களிடையே முன்னெடுக்கப்பட்டு வந்த மேற்படி செயற்திட்டம் அதன் நோக்கத்தினை எட்டியிருந்ததுடன், ஏனைய இளைஞர்களும் இத்திடங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளும் பலராலும் முன்வைக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் தொடர்ச்சியாக மேலும் பல இளைஞர்களையும் வன்முறை தீவிரவாதம் தொடர்பாக தெளிவுறுத்தி அவர்களை வலுவூட்டும் வகையில் மீண்டும் லிப்ட் நிறுவனம் ஊடாக அடுத்த கட்ட செயற்திட்டத்தினை முன்னெடுக்கும் வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேற்படி ஒப்பந்தமானது இலங்கைக்கான நியுசிலாந்து நாட்டின் பிரதி உயர்ஸ்தானிகர் அன்றுவ் ரவலர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சஞ்சீவ விமலகுணரத்தன ஆகியோரின் முன்னிலையில் கெல்விடாஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சுபாஷி திஸ்ஸாநாயக மற்றும் லிப்ட் தன்னர்வ தொண்டு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜானு முரளிதரன் ஆகியோரினால் கைச்சாத்திடப்பட்டது.
இந் நிகழ்வில் கெல்விடாஸ் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், லிப்ட் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment