ஜெயந்திரபுரத்தில் இரத்ததான முகாம்..........

ஜெயந்திரபுரத்தில் இரத்ததான முகாம்..........

மட்டக்களப்பு ஜெயந்திரபுரத்தில் 'உதிரம் தந்து உயிர் காக்க' எனும் தொனிப் பொருளில் இரத்தான முகாமொன்று (21) இடம்பெற்றது.

காயல்டெக் மற்றும் இனோவோக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் தவநீசன், பொதுசுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசல் உட்பட சுகாதாரத்துறை ஆளணியினர் இரத்தமாதிரிகளைச் சேகரித்தனர்.

Comments