மட்டக்களப்பு டெலிகொம் ஊழியர் நலன்புரி சங்கத்தின் விஷேட பொதுச்சபை கூட்டம்..............

 மட்டக்களப்பு டெலிகொம் ஊழியர் நலன்புரி சங்கத்தின் விஷேட பொதுச்சபை கூட்டம்..............

மட்டக்களப்பு டெலிகொம் ஊழியர் நலன்புரி சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் (29) புதன்கிழமை பிற்பகல் 5 மணி முதல் 6 மணி வரை மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள பல நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
தலைவர் ABM. அமானத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் இவ்வருடத்துக்கான ஒன்றுகூடல் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதன் போது சங்கத்தின் செயலாளர் கோகுல ரமணன் அவர்களால் விளக்கங்கள் கூறப்பட்டதுடன் சங்க உறுப்பினர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டது.
இறுதியாக தேநீர் உபசாரத்துடன் இக்கூட்டம் மாலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது.



Comments