கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம்..........

 கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம்..........

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ நான்காம் காலாண்டுக்குரிய குழுக்கூட்டமானது இன்று (30) பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம் பெற்றது.
இதில் உள்ளக கணக்காய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ரீ.ராஜ்குமார், ஏ.எம்.எம்.அன்சார், கணக்காளர் ஏ.மோகனகுமார், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.தாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இதில் கடந்த கூட்டங்களின் போது எடுத்த தீர்மானங்கள் தொடர்பான முன்னேற்றம், உள்ளக கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், பொது கணக்கு குழுவின் பரிந்துரை, நிதி ரீதியிலான முன்னேற்றம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.



Comments