உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மருத்துவ முகாம்..............
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நவம்பர் 14ஆம் திகதிய உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) இடம் பெற்றது.
பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் மாவட்ட செயலகமும் இணைந்து இத் தொற்றா நோய்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியதுடன், செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாமையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
தற்போதைய காலத்தில் தொற்றா நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால் உத்தியோகத்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் இந்நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் வைத்தியர்களினால் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment