தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு.............
தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு.............
மட்டக்களப்பு சிலோன் நேர்சிங் கல்லூரியில் தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு (19) திகதி மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இடம் பெற்றது.
சிலோன் நேர்சிங் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெ.மியூறியா டிலாணியின் தலைமையில் ஆரம்பமாகிய நிகழ்வில், கலாசார நடனம் இடம்பெற்றதுடன் சிலோன் நேசிங் கல்லூரியில் ஒரு வருட கால தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த 100 தாதிய உதவியாளர்களுக்கு தொப்பி அணிவித்து பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இதன் போது பதக்கம் அணிவிக்கப்பட்டு, நினைவுச் சின்னமும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது பிரதம அதிதி உள்ளிட்ட ஏனைய அதிதிகள் அனைவரும் கல்லூரி நிருவாகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் (திட்டமிடல்) பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி எஸ்.ஸ்ரீதரன் கலந்துகொண்ட நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக மக்கள் ஜனநாயக காங்கிரசின் தலைவரும் முன்னால் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.மோகனகுமார், கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரன், சிலோன் நேர்சிங் கல்லூரியின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர் எஸ்.கந்தசாமி, கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.அதிசயராஜ், மக்கள் வங்கியின் முகாமையாளர் ஈ.ஜீ.பிரகாஸ், எந்திரி .ஏ.தம்பிமுத்து, கல்லூரியின் அதிபர் எம்.கே.சிவசிதம்பரம், தாதிய உத்தியோகத்த உயர் அதிகாரிகள் மற்றும் கௌரவம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment