இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா இராஜினாமா.....
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வி அடைந்த நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதனை பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட் செயற்குழு மற்றும் தெரிவுக்குழு பதவி விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் செயற்குழுவை இராஜினாமா செய்யுமாறு கோரி சிவில் செயற்பாட்டாளர்கள் இருவர் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது இராஜினாமா கடிதத்தை (04) சமர்ப்பித்துள்ளார்.
Comments
Post a Comment