இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக போராட்டம்........

 இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக போராட்டம்........

தற்போதைய கிரிக்கட் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பினர் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்த நிலையில், தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் தேர்வுக் குழு மீது கடும் குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், தற்போதைய கிரிக்கெட் நிர்வாகிகளும் தெரிவுக்குழுவும் உடனடியாக தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர்  (03) அறிவித்திருந்தார்.

இந்நிலையில், (04) காலை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக பல தரப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளராக பணியாற்றிய மோகன் டி சில்வா தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் செயற்குழுவிடம் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளார்.

இதேவேளை, ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு ஏற்கனவே ஆறு அணிகள் தகுதி பெற்றுள்ளதுடன், மேலும் இரண்டு அணிகள் செம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தகுதி பெற வேண்டியுள்ளது.

செம்பியன்ஸ் கிண்ணத்திற்கு இலங்கை இன்னும் தகுதி பெறவில்லை, தகுதி பெற வேண்டுமானால், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments