மட்டக்களப்பு ஹரி இல்லச்சிறுவர்களுக்கு கௌரவம்.......

 மட்டக்களப்பு ஹரி இல்லச்சிறுவர்களுக்கு கௌரவம்.......

கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் (05)ம் திகதி திருகோணமலையில் நடாத்தப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் ஹரி இல்லச்சிறுவர்களுக்கு கௌரவ வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள 51 சிறுவர் இல்லங்களில் பொதுப்பரீட்சையின் உயர் பெறுபேறு பல்கலைகழக அனுமதி மற்றும் இணைப்பாட செயற்பாட்டின் திறமை காட்டியவர்கள் இதன் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன் போது ஹரி இல்லச்சிறுவர்கள் பல்கலைகழகம் தெரிவாகியமை, சாதாரண தர பரீட்சையில் அதிக சித்தி பெற்றமை, கிழக்கு மாகாணத்தில் உள்ள இல்லங்களில் கல்வி செயற்பாடுகளில் முன்னிலையாக திகழ்கின்றமை உள்ளிட்ட பிரகீர்த்திய செயற்பாடுகளில் முன்னிலை வகிக்கின்ற வகையில் கௌரவம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments