மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் 'உலகை இணைக்கும் பாலம் தமிழ்' எனும் தலைப்பில் அமைந்த உரையாடல் நிகழ்வு........
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் 'உலகை இணைக்கும் பாலம் தமிழ்' எனும் தலைப்பில் அமைந்த உரையாடல் நிகழ்வு........
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிஞர்கள் கலந்து சிறப்பித்த 'உலகை இணைக்கும் பாலம் தமிழ்' எனும் தலைப்பில் அமைந்த உரையாடல் நிகழ்வு, மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் (01) அன்று மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் இறைவணக்கத்தினைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்தானது, மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர் கு.விநாயகமூர்த்தி அவர்களால் இசைக்கப்பட்டது. மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களால் வரவேற்புரையும் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டது.
அதனையடுத்து நிகழ்வுக்கான வாழ்த்துரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து நிகழ்வுக்கான அறிமுகவுரை தமிழ்ப் பல்கலைக்கழக புலமுதன்மையர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதனையடுத்து மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக கல்விப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் க.ஞானரெத்தினம் அவர்களால் கல்வியின் வாய்ப்புக்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து நவீனயுகத்தில் தமிழ் இலக்கணத்தின் தேவை என்ற தலைப்பில் முனைவர் மா.ரமேஷ்குமார் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது. அதனையடுத்து முனைவர் பட்ட ஆய்வாளர் கி.பிருதிவிராஜ் அவர்களால் கடல் கடந்த கம்பன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாவலர் சாந்தி முஹியித்தீன் அவர்களால் தமிழ் மொழியின் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்ப்பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் முனைவர் சி.அமுதா அவர்களால் கருத்துரை முன்வைக்கப்பட்டது. மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பட்ட 'சங்கம்' நூல் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வுக்கான ஏற்புரை மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க காப்பாளர் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இந்திய இலங்கை நட்புறவை வாழ்த்தி தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைகழகத்தின் சார்பில் நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களால் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி, மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க காப்பாளர் கவிக்கோ வெல்லவூர்க் கோபால், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க பொருளாளர் க.தியாகராஜா, மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க துணைச்செயலாளர் இ.பிரதீஸ்காந்த் ஆகியோருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க துணைச்செயலாளர் வே.அமிர்தலிங்கம் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
Comments
Post a Comment