ஷம்மி சில்வா எடுத்துள்ள தீர்மானம்..............
எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக நீடிக்க எதிர்பார்க்கவில்லை என ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில் இந்த பதவியை, பொறுப்பேற்கும் குழு உறுப்பினர்களால் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (22) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் தடைக்கு காரணம் முற்றிலும் அரசியல் அழுத்தம் என்று கூட்டத்தின் போது ஐசிசி கூறியது. அவர்கள் இந்த பிரச்சினை பற்றி சுமார் 45 நிமிடங்கள் பேசினர்.
'ஐசிசி ஒரு கடினமான முடிவை எடுத்தது. கிரிக்கெட் வாய்ப்பினை வழங்குங்கள்இ இல்லையேல் நாங்கள் முற்றிலும் வீழ்வோம்இ' என்று நான் கூறினேன்.
இங்கு வந்திருந்த இம்ரான் கவாஜாவும் பேசினார். இது முழுக்க முழுக்க அரசியல் செல்வாக்குதான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். 'எவ்வாறாயினும் இது இலங்கைக்கு பெரும் இழப்பே' என்றார்.
இதேவேளை, தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இவ்வருடத்திற்கான கொடுப்பனவுகள் வழமை போன்று ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கப்பெறும் என இதன்போது கூறப்பட்டது.
எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிக்காக விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக இ இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த ஶ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் அது தொடர்பான ஆவணங்களையும் முன்வைத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டியை நடத்த அனுமதி பெற தேவையில்லை என அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
Comments
Post a Comment