களுதாவளையில் வாசிப்பு மாத நிகழ்வுகள் இடம்பெற்றன.......
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பொது நூலகமும் வாசகர் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பரிசளிப்பு விழா நேற்று (02) களுதாவளை பொது நூலகத்தில் நடைபெற்றது.
களுதாவளை பொதுநூலக வாசகர் வட்டத் தலைவர் இ.கோபாலபிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைச் செயலாளர் ச.அறிவழகன், மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் எஸ்.குகநேசன், மற்றும் களுதாவளையில் மகா வித்தியாலய அதிபர் க.சத்தியமோகன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
வாசகர் வட்டத்தால் களுவையூர் நாதம் எனும் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும், சிறந்த தினசரி வாசகருக்கான கௌரவிப்பும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment