மட்டு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவராக சதீஸ்....
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய தலைவராக மு.சதீஸ்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டின் பின்னர் 2023ம் ஆண்டு நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்திலேயே இத்தெரிவு இடம்பெற்றதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.
26ம் திகதியாகிய இன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் உப தலைவர் து.மதன் தலைமையில் ஆரம்பமான பழைய மாணவர் சங்க கூட்டத்தில் இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த உப தலைவர் து.மதன் அவர்கள் 2019 பிற்பாடு இப்பொதுக்கூட்டம் இடம்பெறுவதாகவும், அப்போதிருந்த தலைவர் விலகியதன் காரணமாக தான் பொறுப்பேற்று நடாத்தியதாகவும். குண்டுவெடிப்பு, கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகளை செய்வது கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
இதன் பின்னர் செயலாளரினால் சென்ற கூட்டறிக்கை மற்றும் கடந்தகால செயலறிக்கை வாசிக்கப்பட்டதுடன், பொருளாளர் வருகை தராததன் காரணத்தால் செயலாளரினால் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது.
செயலாளர் பதவிக்கு இருவர் போட்டி இட்டதால் வாக்கெடுப்பு மூலம் இரா.சிவநாதன் தெரிவு செய்யப்பட, தலைவராக மு.சதீஸ்குமார் தெரிவு செய்யப்பட்டார். பொருளாளராக ஜெ.ஜெயப்பிரகாஸ் தெரிவு செய்யப்ட்டனர் இவர்களுடன் நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment