லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம் நாளை....
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் நாளை (06) திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்துக்கு அமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன், மூவாயிரத்து 565 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ஆயிரத்து 431 ரூபாவாகும். 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 668 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment