ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட உள்ளக வீதி திறந்து வைக்கப்பட்டது.......
மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 90 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட உள்ளக வீதி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் முதல்வர் சுப்பிரமணியம் நந்தகோபால் தலைமையில் வீதித் திறப்பு விழா நிகழ்வு இடம்பெற்றது. கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார் உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment