மட்டக்களப்பில் பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தை தினத்தை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன...........
மட்டக்களப்பில் பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தை தினத்தை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன...........
மட்டக்களப்பில் பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தை முன்னிட்டு, 75 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
மண்முனை மேற்கு பிரதேசத்தில் இயங்கி வரும் வாழ்வகம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால், செயற்படுத்தப்பட்ட வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் (10) இடம்பெற்றது.
YMCA மற்றும் CBM அமைப்புக்களின் நிதி அனுசரணையில் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், சமூக சேவைகள் உத்தியோகத்தர், YMCA திட்ட இணைப்பாளர், விவசாய போதனாசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேரிடர் அபாயக் குறைப்பு நவம்பர் 13 தினத்தை முன்னிட்டு 75 குடும்பங்களுக்கு தலா 5 தென்னங்கன்று வீதம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment