அருவி பெண்கள் அமைப்பினால் இணையவழி வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.......

 அருவி பெண்கள் அமைப்பினால் இணையவழி வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு......

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் இணையவழி வன்முறைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் பிரதான மண்டபத்தில் இன்று (23) திகதி நடைபெற்ற குறித்த செயலமர்வில் மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டிருந்ததுடன், அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது இணையவழி வன்முறைகள், இணை சட்டங்கள், மனித உரிமைகள், இனப்பெருக்கம், மகப்பேறு, பாதுகாப்பற்ற சுகாதார பழக்கவழக்கங்கள், போதைப் பாவனை, குடும்ப திட்டமிடல், இனரீதியான வன்முறை, சட்டரீதியான நடவடிக்கைகள் என பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இதன் விளக்கமளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் பிராந்திய மேற்பார்வை தாதிய சகோதரி உள்ளிட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றிவரும் பொது சுகாதார தாதிய சகோதரிகள், பொது சுகாதார மருத்துவ மாதுக்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுகாதார துறைசார்ந்த மேலும் பல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் அமைப்பினால் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உள்ளிட்ட மேலும் பல சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Comments