கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், சமூக சேவை, நன்னடத்தை அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராக ஹரன் நியமனம்....
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், சமூக சேவை, நன்னடத்தை அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராக ஹரன் நியமனம்....
கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவம், சமூக சேவை மற்றும் நன்னடத்தை அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சுப்ரமணியம் ஹரன் அவர்கள் (22) அன்று தனது கடமையினை திருகோணமலையில் அமைந்துள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த இவர், கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவம், சமூக சேவை மற்றும் நன்னடத்தை அமைச்சின் உதவி செயலாளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அக்கரைப்பற்றை பிறப்பிடமாக கொண்டவர், அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment