வவுணதீவில் இரண்டு ஆலயங்களை புனரமைக்கும் பணிகளை அகிலன் பவுண்டேசன் முன்னெடுப்பு............
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டு ஆலயங்களை புனரமைக்கும் பணிகளை இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையுடன் அகிலன் பவுண்டேசன் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளது.
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவட்டவான் ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலயம், மகிழவட்டவானில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயம் என்பன முழுமையாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இன்று அப்பகுதிக்கு விஜயம் செய்த இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் தலைவரும் அகிலன் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான மு.கோபாலகிருஸ்ணன் புனரமைக்கப்படும் ஆலயங்களின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
இதன் போது வறிய நிலையில் குடும்பங்களுக்கும் அகிலன் பவுண்டேசன் ஊடாக உலர் உணவுப்பொருட்களும் வறிய நிலைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment