மட்டக்களப்பில் சிங்கள மொழி, பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்...........
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடாத்தப்பட்ட இரண்டாம் மொழி பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு இன்று (01) இடம்பெற்றது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் அனுராத விஜேகோன் தலைமையில் நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வில், சிங்கள கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பிரதம அதிதியாக உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன் கலந்துகொண்டார். பொது நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் திட்ட உத்தியோகத்தர் ஹேமந்த புஸ்பகுமார, மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் உட்பட பயிற்சி நெறிசார் அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.
Comments
Post a Comment