மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முக்கிய சேவைகள் அனைத்தும் வழமைபோல் இடம்பெற்றது...............
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலையில் பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெற்ற போதிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபகிஸ்கரிப்பு இடம்பெற்ற போதிலும் நோயாளர்களுக்கான சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு இன்று காலை 7 மணி முதல் பகல் 12 மணிவரை முன்னெடுக்கப்பட்ட போதிலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் மற்றும் ஏனைய அவசர சிகிட்சைப்பிரிவுகள் என்பன வழமைபோல் இயங்கியதுடன், வைத்தியர்கள் தமது கடமையினை முன்னெடுத்திருந்தனர்.
Comments
Post a Comment